இந்திய அரசு, உலக வெப்பமாதலையும், காலநிலை நிகழ்வுகளின் மீதான அதன் தாக்கத்தையும் குறைக்க, 2005ன் 45% உமிழ்வை 2030லும், நிகர பூஜ்ஜிய உமிழ்வை 2070லும் எட்ட உறுதி எடுத்துள்ளது.

இந்த இலக்கை எட்டவே அரசு, மின்சார வாகனங்களை ஊக்குவித்தும், பெட்ரோல் / டீசல் வாகனங்களை கட்டுப்படுத்தியும் வருகிறது.
ஆனால் அதிகபட்ச உமிழ்வுக்கு காரணம், நிலக்கரி மூலம் நடைபெறும் மின்சார உற்பத்திதான்.

மின் உற்பத்திக்கான நிலக்கரியின் பயன்பாடு குறைக்கப்பட்டால், நமக்கு பாதிப்பு இருக்குமா? நிச்சயமாக.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாதிப்பு இன்றி வாழ்க்கையை தொடரவே, அரசு தொடர்ந்து சூரிய மின் பூங்காக்கள் அமைத்தும்,
சூரிய மின் நிலையம் அமைக்க வீடுகளுக்கு (1 கி.வா-க்கு ரூ. 30,000, 2 கி.வா-க்கு ரூ. 60,000, 3 கி.வா-க்கு ரூ. 78,000) மானியம் வழங்கியும்,
வர்த்தகம் மற்றும் தொழில்கள் சூரிய மின் நிலையத்துக்கான முதலீட்டை, விரைவுபடுத்தப்பட்ட மதிப்பு குறைப்பு மூலம் 2 வருடங்களில் திரும்பப் பெற அனுமதித்தும் வருகிறது.

சூரிய மின் நிலையம் அமையுங்கள். மின் செலவைக் குறைக்க மட்டுமல்ல; உலக வெப்பமாதலையும், காலநிலை நிகழ்வுகளின் மீதான அதன் தாக்கத்தையும் குறைக்க.

உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்.

செயல்பட அழைப்பு

நிலக்கரி மூலம் 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, 1 கிலோ கரியமில வாயு உமிழப்படுகிறது.

அதுவே, சூரிய சக்தி மூலம் 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதால், 1 கிலோ கரியமில வாயு உமிழ்வு தடுக்கப்படுகிறது.

சூரிய மின் நிலையம் அமைக்க இன்றே முடிவெடுங்கள். இது நம் நாட்டை மட்டுமல்ல, இந்த பூமியையே அழிவிலிருந்து காக்க.

உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்.

உலக வெப்பமாதல் உலகில் ஏற்படுத்தும் அழிவுகளைக் காண்க
  • எல்லாம்
  • செய்திக் கட்டுரைகள்
  • காணொளிக்கள்
காணொளி: 2002 முதல் 2020 வரையிலான அண்டார்டிகாவின் பனி இழப்பு
காணொளி: அண்டார்டிகாவின் இறுதிநாள் பனிப்பாறை இன்னும் 3 வருடங்களில் நொறுங்குவது நிச்சயம்
காணொளி: வெனிஸ் ஏற்கனவே வெள்ளமயம்; மூழ்கக்கூடும்?
காணொளி: உலக வெப்பமயமாதல்: 1880 - 2021 உலகின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு வெவ்வேறு அளவில் வெப்பமாகியுள்ளன என்பதை விளக்கும் உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட அறிவியல்பூர்வ காலநிலை தரவுகள்.
காணொளி: கடலின் மேற்பரப்பு வெப்பநிலை: ஜனவரி 2016 - மார்ச் 2020 கடல் மட்டத்தை உயர்த்தும் உலகின் பல்வேறு பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பை விளக்கும் உறையவைக்கும் காணொளி.
காணொளி: கடல் மட்ட உயர்வு: 1992 - 2017 நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகமும் கலிஃபோர்னியா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியும் பதிவு செய்த தரவுகளின்படி 1992 முதல் 2017 வரை உலக கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை (மில்லி-மீட்டரில்) விளக்கும் காணொளி.
பேச்சு: கடலில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இந்தியக் கடலோர நகரங்களும் பகுதிகளும்
செயல்பட அழைப்பு

விரைவுபடுத்தப்பட்ட மதிப்பு குறைப்பு இல்லாமலே, சூரிய மின் நிலையத்துக்கான முதலீட்டை மின் தொகை சேமிப்பு 5-6 வருடங்களில் ஈடு செய்யும்.

மேலும் சூரிய மின் நிலையம் மூலம் கிடைக்கும் லாபம், வாழ்நாள் முழுதும் தொடரும்.

சூரிய மின் நிலையம் அமைக்க இன்றே முடிவெடுங்கள். தேசத்தின் மீது கொண்ட பற்றுக்காக. இப்பூவுலகின் மீது கொண்ட அக்கறைக்காக.

உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்

ஒரு வருடத்தில் எத்தனை டன் CO2 உமிழ்வுக்கு, உங்களது நிறுவனங்கள் காரணமாகின்றன ???

எல்.ட்டி-V "இதர வகை & பொது நோக்கம்" கட்டணம் யூனிட்டுக்கு ரூ.10.15 மற்றும் கி.வாட்டுக்கு மாதம் ரூ.107 (ஜூலை 15, 2024 முதல்),
எல்.ட்டி-IIIB "தொழிற்சாலைகள்" கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8.00 மற்றும் கி.வாட்டுக்கு மாதம் ரூ.81 (ஜூலை 15, 2024 முதல்),


உங்கள் 2 மாத கரண்ட் பில்?


உங்கள் உத்தேச பயன்பாடு (15KW லோடு)

₹ 50,000

5,000 யூனிட் (kWh)


1 யூனிட் நிலக்கரி அனல் மின்சாரம் உற்பத்தியின்போது உமிழ்வு


இதைப் பயன்படுத்துவதால் நீங்கள் பொறுப்பாகும் CO2 உமிழ்வுகள்

1 கிலோ CO2

வருடம் 30 டன், 30 வருடத்தில் 900 டன்


கார்பன் மாசுபாட்டால் இறப்பு (1 டன் CO2க்கு 3 பேர் எனில்)


CO2ஆல் பூமி வெப்பமாவது (1 டன்னுக்கு 1.5x10-12 டிகிரி செல்சியஸ் எனில்)

2,700 பேர்

1.35 x 10-9°C

0.00000000135°C

என்னுடைய உமிழ்வுகளை நான் எப்படி தடுப்பது? (தானே சுத்தமான சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம்)


சூரிய மின் நிலைய அளவு



மின் உற்பத்தி / நாளுக்கு

25 கி.வாட் (kWp)

100 யூனிட்டுகள் (kWh)


ஆன்-கிரிட் சூரிய மின் நிலையம் எனில்


உத்தேச விலை

மின்-கிரிட்டுக்கு ஏற்றுமதி

17 லட்சம் + ஜிஎஸ்டி


ஆஃப்-கிரிட் சூரிய மின் நிலையம் எனில்


உத்தேச செலவு

பகுதி பேக்-அப்

ஆன்-கிரிட் + பேட்டரி விலை


30 வருட மின்சாரத்துக்கு கட்டியிருக்க வேண்டியது


சூரிய மின்-உற்பத்தியை 100% பயன்படுத்தினால், 30 வருட கரண்ட் பில் சேமிப்பு

90 லட்சம்

70 லட்சம்

துரிதப்படுத்தப்பட்ட மதிப்பு குறைப்பு மூலம், 2 வருடத்தில் 100% சூரிய முதலீட்டை பெறலாம் (60% + 40%).
அது இல்லாமலே, பில் தொகை சேமிப்பு 5-6 வருடத்தில் முதலீட்டை ஈடு செய்யும். லாபம் வாழ்நாள் முழுதும் வரும்.



சூரிய சக்திப் பயன்பாட்டால் விளையும் பயன்கள்

சூரிய சக்தித் தீர்வுகள் சூரிய சக்தியை, மின்சாரமாக அல்லது சூடாக்க / குளிர்விக்கப் பயன்படுத்துகின்றன. அவை நம் மின் செலவை குறைக்கவும், நமது மின் தேவையைக் குறைப்பதன் மூலம் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகின்றன.
உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். எங்களை சந்திக்க வரலாம், அல்லது +91-84899-25659ல் அழைக்கலாம் அல்லது contact@resilientsolar.in மூலம் மின்னஞ்சல் செய்யலாம்.

சேமிப்பு

அதிகபட்ச சேமிப்பு, வீடுகளுக்கு மானியம்.

சுற்று சூழல்

சூழலை மாசுபடுத்தாது

பராமரிப்பு

குறைந்த பராமரிப்பு

தூய சக்தி

1 கிலோ CO2 / யூனிட் உமிழ்வு தடுப்பு.

விரிவாக்கம்

விரிவுபடுத்த முடியும்

வரி சேமிப்பு

2 வருடத்தில் விரைவுபட்ட மதிப்பு குறைப்பு

சூரியசக்தித் தீர்வுகள்

சூரிய மின்சக்தித் தீர்வுகள் சூரிய ஒளியில் இருந்து (1கிலோ-வாட் அமைப்பு தினமும் 4 யூனிட் வரை) மின்சாரத்தை நேரடியாக உற்பத்தி செய்யவும் மின்-கலன்களில் சேமித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்றவை.
அதுபோல், மின்சாரம் மூலம் பொருட்களை சூடாக்குவதைவிட, சூரியக் கதிர்களில் இருந்து வெப்பத்தை நேரடியாக சேகரிக்கும் சூரிய வெப்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவது எளிதும், செயல்திறன் மிக்கதும் ஆகும். குளிக்க மற்றும் பொருட்களைக் கழுவும் தேவைகளுக்காக நீரை சூடாக்குவதிலிருந்து, பொருட்களை உலர்த்த காற்றை சூடாக்கவும், நீரை ஆவியாக்கி அதன் மூலம் அதிக வெப்பநிலைக்குப் பொருட்களை சூடாக்கவும், உலோகங்களை உருக்கவும் எனப் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை வடிவமைக்க முடியும்.
இதுதவிர, சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியும்.

மின் உற்பத்தி நிலையங்கள்

மின்சக்தியை சேமிக்கும் வசதி இல்லாத, க்ரிட்டுடன் இணைந்த வகை & மின்சக்தியை சேமிக்கும் வசதி கொண்ட, தனித்து இயங்கும் வகை

ஆன்-க்ரிட் (என்ற) மின்-வாரிய சப்ளை தேவைப்படும் மின் உற்பத்தி நிலையங்கள்

  • பேட்டரி இருக்காது. உபரி மின்சாரத்தை மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யும்.
  • மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதியைத் தடுக்க சிறப்பு உபகரணங்கள் தேவை.
  • மின்-வாரிய சப்ளை இருந்தால் மட்டுமே இயங்கும்.
  • மின்-தடையின்போது இயங்காது.
  • திடீரென இயக்கம் தடைபட்டாலும் பாதிக்கப்படாத மின் சாதனங்களுக்கு ஏற்றவை.
  • பேட்டரிகளை பராமரிக்க விரும்பாத, ஆனால் மின்சார பில் தொகையைக் குறைக்க விரும்பும் பயனாளிகளுக்கு ஏற்றது.
  • வீட்டுப் பயனாளர்களுக்கு ஏற்ற யூனிட் சரிகட்டும் முறை (பில் செய்யப்படும் யூனிட்டுகள் = பயன்படுத்திய யூனிட்டுகள் - ஏற்றுமதி செய்த யூனிட்டுகள்).
  • மற்ற அனைத்து பயனாளர்களுக்கும், பில் தொகை சரிகட்டும் முறை (பில் தொகை = பயன்படுத்திய யூனிட்டுகளுக்கான தொகை - (ஏற்றுமதி செய்த யூனிட்டுகள் * ரூ.2/-உத்தேசமாக)) .
  • மின்சாரம் மின்-வாரிய க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், மின்-வாரிய ஒப்புதலைப் பெறவேண்டும்.

ஆஃப்-க்ரிட் (என்ற) மின்-வாரிய சப்ளை தேவைப்படாத மின்னுற்பத்தி நிலையங்கள்

  • உபரி மின்சாரத்தை சேமிக்க பேட்டரி(கள்) தேவை.
  • உபரி மின்சாரத்தை மின்-க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
  • முற்றிலும் மின்-வாரிய சப்ளை இல்லாமலே இயங்க முடியும்.
  • மின்-தடையின்போது சூரிய-மின் உற்பத்தியும், பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சக்தியும் கிடைக்கும்.
  • திடீரென இயக்கம் தடைபடக்கூடாத மின் சாதனங்களுக்கு ஏற்றவை.
  • மின்-வாரிய சப்ளை இல்லாவிட்டாலும், பகலில் சூரிய-மின் உற்பத்தி தேவைப்படும் பயனாளிகளுக்கு ஏற்றது.
  • சூரிய-மின் உற்பத்தி + பேட்டரி பேக்-அப் இரண்டையும் விட லோடு அதிகமாக இருக்கும்போது, பற்றாக்குறை மின்சாரம் மின்-வாரிய சப்ளையில் இருந்து பெறப்படும்.
  • சூரிய-மின் உற்பத்தி முழுவதும் பயன்படுத்தப்படுவதால், மின்சார பில் தொகை தானாகவே குறையும்.
  • மின்சாரம் மின்-வாரிய க்ரிட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால், மின்-வாரிய ஒப்புதல் தேவையில்லை.

பம்ப்புகள்

சூரிய மின் பம்ப்புகள் - மின் வாரிய சப்ளையாலும் இயங்கும்

சோலார் பம்ப்புகள்

  • பம்ப்புகளைத் தவிர வேறு எந்த மின் சாதனத்தையும் இதில் இயக்க முடியாது.
  • சூரிய மின் உற்பத்தி நடைபெறும் வரை (காலை முதல் மாலை வரை) பம்ப்புகள் இயங்கும்.
  • பம்ப்பு இறைக்கும் நீரின் அளவு சூரிய ஒளியின் தீவிரத்தைப் பொறுத்தது.
  • மின்-வாரிய சப்ளையாலும் இயக்கலாம்.

வாட்டர் ஹீட்டர்கள்

100 லிட்டரில் (3 - 4 நபர்கள் குளிக்கப் போதுமானது) இருந்து வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும்.

காற்றில்லாத குழாய் சேகரிப்பான் (இ.ட்டி.சி) வகை சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

  • சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி பெரிய-விட்ட கண்ணாடிக் குழாய்கள் மூலம் தண்ணீர் சூடாக்கப்படுகிறது.
  • கடின நீரிலும் வேலை செய்யும் (அடைத்துக் கொள்ளாது).
  • பராமரிப்பு தேவையில்லை.
  • மின்சார ஹீட்டிங் காயிலும் பொருத்திக் கொள்ளலாம்.
  • 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழ் தண்ணீரை சூடாக்க ஏற்றவை.

தட்டைத் தகடு சேகரிப்பான் (எஃப்.ப்பி.சி) வகை சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

  • சூரிய ஒளியின் வெப்பத்தைப் பயன்படுத்தி கண்ணாடித் தகடுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள சிறிய-விட்ட காப்பர் குழாய்கள் மூலம் தண்ணீர் சூடாக்கப்படுகிறது.
  • நல்ல நீரில் மட்டும் வேலை செய்யும்.
  • காப்பர் குழாய்களை சுத்தப்படுத்த தொழில்முறை சேவையாளர்கள் தேவை.
  • 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் கீழ் தண்ணீரை சூடாக்க ஏற்றவை.

குவிக்கப்பட்ட சூரிய சக்தி (சி.எஸ்.ப்பி) வகை வெப்ப அமைப்புகள்

செயல்முறை-வெப்ப தீர்வுகள் - வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு செய்ய இடத்தைப் பார்வையிடுதல் அவசியம்

சூரிய ஒளியை குவித்துப் பயன்படுத்தும் (சி.எஸ்.ப்பி) வகை வெப்ப அமைப்புகள்

  • 140 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை சூடாக்க ஏற்றவை.
  • 50 சதுர-மீட்டர் வரையிலான உலோகக் கிண்ண / அரை-உருளைக் குழாய் அமைப்புகள் மூலம் சூரிய ஒளி குவிக்கப்பட்டு சூடாக்கப்படுகிறது.
  • பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவை.
  • 3 - 4 வருடங்களுக்குள் முதலீட்டை ஈடு செய்துவிடலாம்.

சூரிய உலர்த்திகள்

உணவு, மூலிகைகள் மற்றும் விவசாய விளைபொருட்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும், சுத்தமாகவும் உலர்த்த

சூரிய உலர்த்திகள்

  • பொருட்களில் இருந்து விரைவாக ஈரத்தை வெளியேற்றும்.
  • பொருட்கள் மூடப்பட்ட அமைப்பில் வைக்கப்படுவதால், தூசு, பூச்சிகள், பறவைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு.
  • நேரடி சூரிய ஒளியில் உலர்த்துவதை விட விரைவானது.
  • காய்கறிகள், பழங்கள், விளைபொருட்கள், தானியங்கள், மூலிகைகளை உலர்த்தலாம்.
  • கொள்-அளவுக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் செய்யலாம்.

சோலார் தெரு விளக்குகள்

தனித்து இயங்கும் DC (டி.சி) விளக்கு அமைப்பு

சோலார் தெரு விளக்குகள்

  • பேட்டரி மற்றும் கட்டுப்படுத்தும் மின்னணு சர்க்கியுட் உடன் தனித்து இயங்கும் DC (டி.சி) விளக்கு அமைப்பு.
  • வழக்கமாக பயன்படுத்தும் லெட்-ஆசிட் வகை அல்லது லித்தியம் வகை பேட்டரிகள்.
  • லெட்-ஆசிட் வகை பேட்டரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் டிஸ்ட்டில்ட்-வாட்டர் நிரப்ப வேண்டும்.
  • லித்தியம் வகை பேட்டரிகளுக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை - எனவே கச்சிதமாக வடிவமைக்க முடியும்.
  • விருப்ப அம்சங்கள்: குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் விளக்கை மங்கலாக்குதல், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் நடமாட்டம் இல்லாவிட்டால் விளக்கை அணைத்தல்.

சோலார் சாதனங்கள்

வழக்கமான மற்றும் அவசரப் பயன்பாட்டுக்கான வீட்டு-உபயோக சாதனங்கள்

சோலார் ஃப்ளாஷ் லைட்டுகள், டேபிள் லைட்டுகள், லாந்தர் லைட்டுகள்

  • பேட்டரி மற்றும் கட்டுப்படுத்தும் மின்னணு சர்க்கியுட் உடன் தனித்து இயங்கும் DC (டி.சி) விளக்கு அமைப்பு.
  • சாதனத்துக்கு ஏற்ப சோலார் பேனல்கள் தனித்தோ, இணைந்தோ இருக்கும்படியான வடிவமைப்பு .
  • எளிதில் எடுத்து செல்லும் வகையிலான வடிவமைப்பு.
  • அலைபேசி பேட்டரியை "சார்ஜ்" செய்து கொள்ளும் வசதி.
  • சூரிய ஒளியில் சில மணி நேரம் வைத்தால், பேட்டரி முழுதும் "சார்ஜ்" ஆகும் வசதி.

சூரிய மின் வேலிகள்

விலங்குகள் நுழைவதைக் கட்டுப்படுத்த - வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு செய்வதற்கு, இடத்தைப் பார்வையிடுவது அவசியம்

சூரிய மின் வேலிகள்

  • இதனுடன் தொடர்பில் வரும் வரும் விலங்குகளுக்கு உயிருக்கு பாதிப்பில்லாத வகையில், உயர் மின்-அழுத்த குறைந்த மின்சார ஷாக் தரும் அமைப்பு.
  • தடுக்கப்பட வேண்டிய விலங்குகளின் அளவைப் பொறுத்து, வேலியில் தேவைப்படும் லைன்களின் எண்ணிக்கை வேறுபடும்.
  • வழக்கமான லெட்-ஆசிட் அல்லது லித்தியம் வகை பேட்டரிகள்.
  • லெட்-ஆசிட் பேட்டரிகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் டிஸ்ட்டில்ட் வாட்டர் நிரப்ப வேண்டும்.
  • லித்தியம் பேட்டரிகளுக்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
  • வேலி மீது விழும் மரம், கிளை போன்றவற்றால் சாய்ந்தாலும் சரி செய்து கொள்ள ஏதுவாக, வளைந்து கொடுக்கும் வேலி வடிவமைப்பு.

இயக்கத் தீர்வுகள்

மின்சார வாகனங்களுக்கானது

மின்சார வாகனங்களுக்கான இயக்கத் தீர்வுகள்

  • இருக்கும் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற பலரும் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கிட்டுகள்.
  • உயர்ந்த எரிசக்தி சேமிப்பு, பிக்-அப் மற்றும் செயல்திறனுக்காக, லித்தியம் வகை பேட்டரிகள்.
  • 2-சக்கர மற்றும் 4-சக்கர வாகனங்களுக்கும்.

DC (டி.சி) மின் சாதனங்கள்

எரிசக்தியை சேமிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்

12 - 48 வோல்ட் மின் அழுத்தத்தில் இயங்கும் DC (டி.சி) சாதனங்கள்

  • டி.சி சாதனங்களுக்கு மாறுவதன் மூலமே 50% வரை மின்சக்தியை சேமிக்க வாய்ப்பு.
  • உலக அளவில் அங்கீகாரம் பெற்ற 12 - 48 வோல்ட் வரம்பில் இயங்கும், பயன்படுத்த பாதுகாப்பான டி.சி சாதனங்கள்.
  • டி.சி சீலிங் ஃபேன்கள், டி.சி ஃப்ரீசர்கள், டி.சி வாஷிங் மெஷின்கள், டி.சி ஏர் கண்டிஷனர்கள், டி.சி பம்ப்புகள்.
  • பேட்டரிகளுடன் கூடிய, கேஸ்-ஸ்டவ் இல்லாத, குளிர்ச்சியான சமையல் அறைகள்.

நாங்கள் எப்படி வேறுபடுகிறோம்?

வாடிக்கையாளர்களை சூரியசக்தித் தீர்வுகள் குறித்து புரிந்து கொள்ள வைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியின் அதிகபட்சப் பயன்பாட்டை உறுதிசெய்ய, நாங்கள் பல்வேறு தீர்வுகளை ஒருங்கிணைத்து வழங்குகிறோம்.
விலையைக் குறைப்பதற்காக, குறைந்த விலை (தரம்) கொண்ட பொருட்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை.
நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்துகிறோம் - சில நேரம் தரக் கட்டுப்பாடுகளில் குறிப்பிடப்படாதவற்றில்கூட.
உலக வெப்பமயமாதலை எதிர்த்த இப்போரில், எங்களால் முடிந்த அளவுக்கு அத்தனை பேரையும் ஈடுபடுத்துவதில் தீர்மானமாக உள்ளோம்.

தீர்வுகளும் உதிரி பாகங்களும்

நாங்கள் சந்தேகத்துக்குரிய தரம் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து வரும், விலை மலிவான பாகங்களைத் தவிர்க்கிறோம். நாங்கள் நம்பிக்கையிலும் செயல்திறனிலும் பெயர் பெற்ற தரமான பாகங்களையே - அவை விலை அதிகமானாலும் கூட - பயன்படுத்துகிறோம்.

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உலகின் சிறந்த பேனல்களில் ஒன்றான, ஆர் ஈ சி நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட அல்ட்ரா ப்யூர்-ஆர் 410 வாட் சோலார் பேனல்கள்.


ஆர் ஈ சி அல்ட்ரா ப்யூர்-ஆர் 410 வாட் சோலார் பேனல்கள்

உலகின் சிறந்த பேனல்களில் ஒன்றான, அமெரிக்காவின் மேக்சியான் நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட சன்பவர் சோலார் பேனல்கள்.


சன்பவர் பர்ஃபாமன்ஸ் சீரீஸ் பேனல்கள்

சன்பவர் பர்ஃபாமன்ஸ் P சீரீஸ் பேனல்கள், இந்திய சூழ்நிலையில் அதிக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.


சன்பவர் பர்ஃபாமன்ஸ் P5 பேனல்கள்

கோல்டி - 400 வாட்ஸ் வரை திறன் கொண்ட பாலி-கிரிஸ்டலைன் & மானோ-பெர்க் பேனல்களை உற்பத்தி செய்யும் ஒரு குஜராத்திய ப்ராண்ட்.


கோல்டி மானோ-பெர்க் 400 வாட்ஸ்

(ABB) ஏபிபி உலகம் முழுதும் பெயர் பெற்ற ப்ராண்ட். ஏபிபியின் சோலார் இன்வெர்ட்டர் வியாபாரம் தற்போது மற்றொரு பெரிய இத்தாலிய நிறுவனமான (FIMER) ஃபைமரின் கட்டுப்பாட்டில் உள்ளது.


ஃபைமர் ஏபிபி ஆன்-க்ரிட் இன்வெர்ட்டர்கள்

(VISPRA) விஸ்ப்ரா ஆஃப்-க்ரிட் இன்வெர்ட்டர்கள் உறுதியானவை & நீடித்து உழைப்பவை. மேலும் உள்ளூர் ப்ராண்டாக இருப்பதால், இவற்றை சர்வீஸ் செய்வதும் எளிது.


விஸ்ப்ரா ஹை-ப்ரிட் இன்வெர்ட்டர்கள்

கோவை சிபிஎஸ்சி பள்ளி: 18 கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட ஆன்-க்ரிட் சூரிய மின்னுற்பத்தி நிலையம்.


ஏபிபி & கோல்டி 375வாட் மானோ பெர்க் அலுமினிய பேனல் தாங்கி & ஃப்ராங்க்ளின் ஏர்-டெர்மினல் (இடி தாங்கி)
தொடர்புக்கு

தற்போது நாங்கள் சிறந்த முறையில் சேவை வழங்கக்கூடிய இடங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு வாடிக்கையாளருடனான வாக்குறுதி, அவருக்கு செய்த விற்பனையோடு முடிவதில்லை - மாறாக அது அப்போதுதான் தொடங்குகிறது. எங்களுடைய இலக்கு அனைவரிலும் பெரிய நிறுவனமாவது அல்ல, மாறாக நாங்கள் செய்வதில் அனைவரிலும் சிறந்தவர்களாக இருப்பதே. தயவு செய்து, உங்கள் பகுதியில் எங்கள் சேவை வழங்குவது பற்றி உறுதிசெய்து கொள்ளுங்கள்.

எங்கள் முகவரி

1C, பெரிய தோட்டம் காலனி முதல் தெரு, வீரகேரளம் ரோடு, கரும்பு இனப்பெருக்க நிறுவனம் போஸ்ட், கோவை, இந்தியா 641007

மின்னஞ்சல்

contact@resilientsolar.in

அழைக்க

+91 84899 25659

Loading
Your message has been sent. Thank you!